/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உசிலம்பட்டியில் மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலகம்; இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

ADDED : நவ 20, 2025 05:27 AM
உசிலம்பட்டி: 'உசிலம்பட்டியை மீண்டும் கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம், இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: 1960 முதல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உசிலம்பட்டி கல்வி மாவட்டம் செயல்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக மதுரை கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது. பின்தங்கிய மாணவர்கள் அதிகம் உள்ள நிலையில், இதனால் பலர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது.
கடந்தாண்டு மதுரை கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பில் மட்டும் 1500 பேர் இடைநிற்றல் இருந்தது. இவர்களில் 800 பேர் உசிலம்பட்டி பகுதியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் நலத்திட்டங்கள், கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள், கோப்புகள், தபால்களை கொடுப்பதற்கு கல்வி மாவட்ட தலைநகரங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதால் அதிக காலம், நிதி செலவிட வேண்டியுள்ளது. இதற்கு உடற்கல்வி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் பல பள்ளிகளில் இல்லாத நிலையில் ஆசிரியர்களே இப்பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதனால் மாணவர்கள் பாதிக்கின்றனர். எனவே உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனுவில், 'உசிலம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.