/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் மாமருந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
/
மக்கள் பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் மாமருந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
மக்கள் பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் மாமருந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
மக்கள் பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் மாமருந்து எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேச்சு
ADDED : ஜன 22, 2024 05:16 AM
மதுரை: மக்கள் பிரார்த்தனைகளுக்கு சுந்தரகாண்டம் ஒரு மாமருந்து என எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசினார்
அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.,காலனியில் நடந்த சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியதாவது:
இக்கும்பாபிஷேகம் நடப்பது 500 ஆண்டுகளில் ஒரு அற்புதமான காலம். சூரியவம்சத்தில் பிறந்தவன் ஸ்ரீ ராமன். அவனது காலத்தில் மிக துன்பமான காலம் சீதாவை பிரிந்தது. அப்போது ராமனுக்கு மிகவும் உதவியவர் ஆஞ்சநேயர். ராமாயணத்தில் உள்ள பல பகுதிகளில் அனுமன் சீதையை தேடி செல்லும் பகுதி சுந்தர காண்டம்.
இப்பகுதியை சொல்பவர், கேட்பவர் பெரும் நன்மைகளை அடைவர். இதை சுருக்கமாக ஐந்து நிமிடத்திலும் பாராயணம் செய்யலாம். 5 நாட்களுக்கும் அணு அணுவாய் வியக்கலாம். இன்றும் பல பிரார்த்தனைகளுக்கு சுந்தர காண்டம் மாமருந்தாக திகழ்கிறது.
இதில் சுந்தரன் அனுமனே. வானர இனத்தவன். ஆயினும் வரசித்திகள் மிகுந்தவன். தேவர்கள் வரிசையில் நின்று அனுமனுக்கு வரங்களை அளித்து அவனை பெரும் சக்திமான் ஆக்கிவிடுகின்றனர்.
ஆயினும் அனுமன் அந்த சக்திகளை தன் நலத்துக்கு பயன்படுத்தாமல் ராமன் நிமித்தம் - நல்லதற்கே பயன்படுத்தினான். அனுமனாலேயே சீதை இருக்கும் இடம் ராமனுக்கு தெரிய வருகிறது. ஸ்ரீராம துாதுவனாக அனுமன் ராவணனை சந்திக்கும் கட்டமும், அப்போது ராவணனுக்கு அனுமன் சொல்லும் புத்திமதிகளும் மிக ஆழமானவை. இதனால் அனுமன் சொல்லின் செல்வனாகிறான். ஸ்ரீராமனுக்கு துணை புரியவே அவதரித்தவன். சிரஞ்ஜீவி என்கிற அழியா வரம் பெற்றவன். யுகங்கள் கடந்தும் வாழ்ந்து வருபவன்.
இன்றும் ராமநாப ஜெபம் நடக்கும் இடங்களில் அனுமன் சூட்சமமாக நடமாடுகிறான்.மனித மனம் குரங்கு போல் தாவும் தன்மை உடையது. அதை அடக்கினால் மலையையே அசைக்கும் சக்தி அதற்கு வந்துவிடும். சக்திமிகுந்த மனங்கள் எல்லாமே அனுமன் வாழும் மனங்களாகும். அனுமன் பக்தி, பணிவுக்கு இலக்கணமாக திகழ்பவன் என்றார். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்தார்.