ADDED : மார் 11, 2024 06:06 AM

அ நிறம் | அளவு
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமின் 55 வது உதய தின விழா கொண்டாடப்பட்டது.
மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். மத்திய துறை பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமை வகித்தார். விமான நிலைய துணைப் பொது மேலாளர் ஜானகிராமன், மேலாளர் சுந்தரராஜன், முதன்மை பாதுகாப்பு அலுவலர் கணேசன், போலீஸ் உதவி கமிஷனர் செல்வகுமார், தாசில்தார் கோபி, பல்வேறு விமான நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடந்தது.
