/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாளை முதல் தொழில் வர்த்தக பொருட்காட்சி
/
நாளை முதல் தொழில் வர்த்தக பொருட்காட்சி
ADDED : ஏப் 22, 2025 06:14 AM
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (ஏப்.23) முதல் ஏப்.27 வரை தொழில் வர்த்தக பொருட்காட்சி நடக்கிறது.
சங்கத் தலைவர் ஜெகதீசன், பொருட்காட்சி தலைவர் வரதராஜன் கூறியதாவது: 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் பொருட்காட்சியில் இடம்பெற உள்ளன.
தமிழக அரசின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஸ்டால்கள் அமைக்கின்றனர்.
உணவகம், சிறுவர்களுக்கான நவீன விளையாட்டு சாதனங்களுடன் கூடிய அரங்குகள், தென்மாவட்டங்களில் முதல்முறையாக குளுகுளு பஸ்சில் 12 டி விளையாட்டுகள் இடம்பெற உள்ளன.நாளை முதல் 27 வரை தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 வரை தொழில் வர்த்தக பொருட்காட்சி நடைபெறுகிறது.
மேயர் இந்திராணி பொன்வசந்த் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.
அனுமதி இலவசம். பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டு எண்களின் அடிப்படையில் தினமும் குலுக்கல் முறையில் மதியம் ஒரு மணி, 3:00 மணி, மாலை 5:00, இரவு 7:00, 9:00 மணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.
நிறைவுநாளில் மெகா பம்பர் பரிசாக மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி, எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள், டபுள் டோர் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றனர்.