/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்மாவட்டங்களில் தொழில்; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
/
தென்மாவட்டங்களில் தொழில்; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தென்மாவட்டங்களில் தொழில்; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
தென்மாவட்டங்களில் தொழில்; உயர்நீதிமன்றத்தில் முறையீடு
ADDED : ஜன 10, 2024 06:50 AM
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு முன் வழக்கறிஞர் முனியசாமி ஆஜராகி முறையிட்டதாவது: தென்மாவட்டங்களில் தொழில், வேலைவாய்ப்புகள் குறைவு. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. மக்கள் வேலைவாய்ப்புத் தேடி கோவை, திருப்பூர், சென்னைக்கு இடம் பெயர்கின்றனர். மதுரை உட்பட தென்மாவட்டங்களில் தொழில்கள் துவங்க நடவடிக்கை கோரி தமிழக தொழில்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்கவில்லை.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. இதில் திருநெல்வேலியைத் தவிர தென்மாவட்டங்களின் பிற பகுதிகளில் தொழில் துவங்க ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில் துவங்க தமிழக அரசுக்கு உத்தரவிடும் வகையில் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதிகள்: வாய்ப்பில்லை. மனு செய்யும்பட்சத்தில் விசாரிக்கப்படும் என்றனர்.

