/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரியல் எஸ்டேட் துறையில் பாதுகாப்பான முதலீட்டு சூழல் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தகவல்
/
ரியல் எஸ்டேட் துறையில் பாதுகாப்பான முதலீட்டு சூழல் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தகவல்
ரியல் எஸ்டேட் துறையில் பாதுகாப்பான முதலீட்டு சூழல் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தகவல்
ரியல் எஸ்டேட் துறையில் பாதுகாப்பான முதலீட்டு சூழல் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் தகவல்
ADDED : நவ 16, 2025 03:50 AM
மதுரை: 'ரியல் எஸ்டேட் துறையில் பாதுகாப்பான முதலீட்டு சூழல் உருவாகியுள்ளது' என அதன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.
தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் (ரெரா) சட்ட வழிமுறை, விதிகளை செயல்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் நடந்தது.
ஆணைய தலைவர் சிவ் தாஸ் மீனா சட்ட விதிகள் விளக்க கையேட்டினை வெளியிட்டு பேசியதாவது: மக்கள் வீடு வாங்கும் போது அவர்களின் உரிமைகளை பாதுகாக்க, கட்டுமானத் துறையில் நம்பக மற்றும் வெளிப்படைத் தன்மையை உருவாக்க 'ரெரா' சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. சிக்கல் ஏற்பட்ட காலம் இருந்தது. இன்று 'ரெரா' செயல்பாடுகள் அந்நிலையை மாற்றி, பாதுகாப்பான முதலீட்டு சூழலை உருவாக்கியுள்ளது.
மக்கள் எந்த திட்டத்தை தேர்வு செய்கின்றனரோ அது 'ரெரா'வில் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அனுமதி உள்ளதா, வேலை எப்போது முடியும் என்பதை இணையதளத்தில் அறிய முடியும். மக்கள், மேம்பாட்டாளர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டால், 'ரெரா'வில் புகார் அளித்து தீர்வு பெறலாம் என்றார்.
கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, ஜெகநாதன், சுகுமார் சிட்டிபாபு, இந்தியாவின் ரியல் எஸ்டேட் டெவலப்பர் சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய கட்டுமான நிறுவனங்கள் சங்கம், அனைத்திந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பினர், மதுரை மாவட்ட கட்டட மனை விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

