தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எஸ்.எல்.சி.எஸ்.,ல் புத்தாக்க பயிற்சி

எஸ்.எல்.சி.எஸ்.,ல் புத்தாக்க பயிற்சி

எஸ்.எல்.சி.எஸ்.,ல் புத்தாக்க பயிற்சி


ADDED : டிச 27, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2024 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் (எஸ்.எல்.சி.எஸ்.,) மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் இயங்கி வரும் 31 பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றும் 529 தொழிலாளர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சியாக டிச.,20, 23, 24, 26 ஆகிய நாட்களில் நடந்தது.

மதுரை மண்டல கூடுதல் இயக்குநர் ராஜசேகரன், தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குநர் வேலுமணி, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் வெங்கட்ரமணன், கல்லுாரி முதல்வர் சுஜாதா பேசினர். அப்போது, பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்களை பாதுகாப்பாக கையாள்வது, மருந்து கலவை தயாரிப்பு, மருந்து கலவை நிரப்புதல், உற்பத்தி அறைகள் பாதுகாப்பு, தொழிலாளர்கள் பணியின் போது செய்யக் கூடியது, செய்யக் கூடாதது போன்றவை குறித்து விரிவாக பேசினர். பங்கேற்ற அனைவருக்கும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பாக பணியாற்றுவது தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us