ADDED : டிச 27, 2025 06:57 AM
மதுரை: தமிழ்நாடு உழவர் சந்தை பாதுகாவலர் மற்றும் துப்புரவுப் பணியாளர் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் பக்கிரிசாமி ஆகியோர் அமைச்சர், வேளாண்துறை கமிஷனர், மதுரை கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் முதல் உழவர் சந்தை மதுரை அண்ணாநகரில் துவக்கப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. உழவர் சந்தைகளில் 3 காவலர்கள், 1 துப்புரவுப் பணியாளர் வீதம் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இருந்து மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் மூலம் தினக்கூலி அடிப்படையில் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் மூலமாக ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

