/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவு நீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
/
கழிவு நீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2026 04:58 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தேனி ரோட்டில் நக்கலப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது பூ.குளத்துப்பட்டி. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தில் சேரும் கழிவுநீர் போதிய வடிகால் வசதி இன்றி, ஊருக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அருகேபள்ளத்தில் தேங்கி நிற்கிறது.
இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, கழிவுநீரை தேங்கவிடாது வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். இதற்கிடையே போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சு வார்த்தை நடத்தினர். எனவே போராட்டத்தை ஒத்தி வைத்த பொதுமக்கள், கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என சப்கலெக்டர் உட்கர்ஷ்குமாரிடம் மனு கொடுத்துச் சென்றனர்.

