ADDED : ஜன 12, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தும்மக்குண்டில் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிராம கோயில் பூஜாரிகள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது.
கிராம கோயில் பூஜாரிகள் நலவாரிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து பூஜாரிகளுக்கும் மாத ஊதியம், 60 வயதுக்கு மேற்பட்ட பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலை தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும். மதுரையில் பிப். 22 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத் தலைவர் கணேசன், அமைப்பாளர் வேலுமணி, பொருளாளர் ரமேஷ் பாபு, மண்டல் தலைவர் முருகன், பூஜாரிகள் பேரவை இணை அமைப்பாளர் மலைச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
