ADDED : ஜன 01, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பினர், மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர்.
மாவட்டத் தலைவர் சுரேஷ்பாண்டியன், செயலாளர் ராவியத்பேகம், பொருளாளர் சுப்ரமணி, வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோர் அளித்த மனுவில், 'கடந்தாண்டு கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல இந்தாண்டும் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்' என கூறியிருந்தனர்.

