/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு மைதானங்களில் மேயர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு
/
ஜல்லிக்கட்டு மைதானங்களில் மேயர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு
ஜல்லிக்கட்டு மைதானங்களில் மேயர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு
ஜல்லிக்கட்டு மைதானங்களில் மேயர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு
ADDED : ஜன 06, 2024 06:06 AM

அவனியாபுரம்: மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் ஆய்வு செய்தனர்.
இந்தாண்டு ஜன.,15 பொங்கல் நாளில் அவனியாபுரம், ஜன.,16 பாலமேடு, ஜன.,17 அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அவனியாபுரத்தில் மாவட்ட நிர்வாகமே நடத்துகிறது. நேற்று கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி இளநிலை பொறியாளர் செல்வவிநாயகத்துடன் ஆலோசனை நடத்தினர். கடந்தாண்டு ஏற்பட்ட குளறுபடிகள், உயிரிழப்புகள் போன்றவை நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டனர்.
அலங்காநல்லுார் பாலமேட்டில் ஆய்வு
பாலமேட்டில் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. கலெக்டர், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, எஸ்.பி., சிவபிரசாத், எம்.எல்.ஏ., வெங்கடேசன் போட்டி நடக்கும் திடல், வாடிவாசலை பார்வையிட்டனர்.
பேரூராட்சி தலைவிகள் ரேணுகா ஈஸ்வரி, சுமதி, துணைத் தலைவர்கள் சாமிநாதன், ராமராஜ், செயல் அலுவலர்கள் ஜூலான்பானு, தேவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நிர்வாகிகள் முத்தையன், மனோகரவேல் பாண்டியன், கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.