ADDED : பிப் 20, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி விவசாயிகள் தற்போது காய்கறிகள் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மானாவாரி பகுதிகளில் நெல் அறுவடை முடிந்த நிலையில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் பலர் கோடை நெல் பயிரிட நிலங்களை ஆயத்தம் செய்து வருகின்றனர். கத்தரி, மிளகாய், வெண்டி, அவரை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை நடவு செய்து வருகின்றனர். பலர் பருத்தி பயிரிடவும் தயாராகி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், ''காய்கறிகள் குறுகிய கால பயிர். குறைவான தண்ணீர் இருந்தால் போதுமானது. செலவும் குறைவு. முறையாக பராமரிப்பு செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்'' என்றனர்.

