UPDATED : அக் 15, 2026 05:50 PM
ADDED : அக் 15, 2026 05:46 PM
மதுரை: மதுரைக் கல்லுாரி பொருளியல் துறை, ஆராய்ச்சி மையம் சார்பில் 'வேளாண்மை மாற்றமும் பருவநிலை பொருளாதாரமும்' என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி வாரிய செயலாளர் நடனகோபால் தலைமை வகித்தார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) ஜெயகாந்தன் தொடங்கி வைத்து, பருவ நிலை மாற்றம், அதனால் வேளாண்மையில் ஏற்படும் பொருளாதார விளைவுகள், எல் நினோ பிரச்னைகள் குறித்து பேசினார்.
எத்தியோப்பியா பேராசிரியர் கருணாகரன், மலேசியா பேராசிரியை மலர்விழி, கல்லுாரி முதல்வர் சேவியர், பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் பேசினர். வேளாண் ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் சமர்ப்பித்தனர். துறைத் தலைவர் தீனதயாளன், இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமன் நாராயணன், பேராசிரியர்கள், மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.
