/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்: டிசம்பரில் ஒருவாரம் நடக்கிறது

ADDED : அக் 05, 2024 06:18 AM

மதுரை : மதுரையில் 4வது சர்வதேச கிழக்கு ஏதென்ஸ் கிராண்ட் மாஸ்டர் ஓப்பன் செஸ் போட்டிகள் டிச.,24 முதல் 31 வரை நடக்க உள்ளது.
உலக மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பு, தமிழ்நாடு செஸ் சங்கம், மதுரை மாவட்ட செஸ் சர்க்கிள் சார்பில் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு செஸ் கூட்டமைப்பு இணைச்செயலாளர் பிரகதீஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: 20 சுற்றுகளாக நடக்கவுள்ள போட்டிகளில் 25 நாடுகளில் இருந்து 600 போட்டியாளர்கள், கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர். உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஒரே ஆண்டில் சென்னை மற்றும் மதுரையில் இரண்டு கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நடக்கின்றன. இந்திய இளம் வீரர்களை உலகத்தர சாம்பியன்களாக உருவாக்கும் நோக்கில் இந்த போட்டிகள் உலகத்தரத்தோடு நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.3 லட்சம், 2ம் பரிசு ரூ.2 லட்சம், ஒவ்வொரு பிரிவு வெற்றியாளருக்கும் ரூ.ஒரு லட்சம் பரிசு, 2 கார்கள், 6 பைக்குகள், 100 சைக்கிள்கள் உட்பட ரூ.44 லட்சம் மதிப்பிலான பரிசு வழங்கப்படும் என்றார்.
மதுரை ஓட்டல் அமிக்காவில் டிச., 24 முதல் 31 வரை 'ஏ' பிரிவினருக்கான போட்டிகள் நடத்தப்படும். மதுரை அழகர்கோவில் ரோடு வல்லப வித்யாலயா பள்ளியில் டிச., 24 - 27 வரை 'பி' பிரிவு, டிச., 28 - 30 வரை 'சி' பிரிவினருக்கான போட்டிகள் நடக்க உள்ளது. விபரங்களுக்கு மதுரை செஸ் கூட்டமைப்பு செயலர் உமா மகேஸ்வரனை 90470 21264 ல் தொடர்பு கொள்ளலாம்.