ADDED : டிச 24, 2024 04:54 AM
திருமங்கலம்: பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் உலக யோகாசன போட்டிகள் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடக்க உள்ளது.
இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போட்டிகளில் வென்ற மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த மாணவர்களுக்கு உலக யோகா போட்டிகளில் கலந்து கொள்ள செக்கானுாரணி அருகே கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் வளாகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. தேனி மாவட்ட யோகாசன சங்கம் இதனை வழங்கியது.
இதில் சர்வதேச போட்டியில் வெற்றி பெறுவதற்கான யோகாசன நிலைகள், அவற்றை செய்ய வேண்டிய முறை, எவ்வளவு நேரம் இருக்க வேண்டும், சுவாசம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
பயிற்சியாளர்கள் கம்பம் ராஜேந்திரன், ரவி ராம் பயிற்சி வழங்கினர். மாதிரி போட்டிகளுக்கு பயிற்சியாளர்கள் முருகன் குமார் நடுவராக இருந்து நடத்தினர். மாணவர்களுக்கு கோயில் நிர்வாகி அருளானந்த சுவாமி பரிசு வழங்கினார்.