ADDED : ஏப் 03, 2026 06:09 PM
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பாமயனின் திணையியம் நுால் அறிமுக விழா நடந்தது. கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர்.
மதுரை கல்லுாரி முன்னாள் முதல்வர் முரளி 'தமிழும் தத்துவமும்' என்ற தலைப்பிலும், அருப்புக்கோட்டை அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ராஜமோகன் 'திணையே தமிழறம்' என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை தலைவர் அழகுச் செல்வம் 'திணை மரபுகளும், தமிழ்க் கலை மரபுகளும்' என்ற தலைப்பிலும், நுால் ஆசிரியர் பாமயன் 'தினையே வாழ்வு' என்ற தலைப்பிலும் பேசினர். பேராசிரியர் ஜோதி முருகன் நன்றி கூறினார். பேராசிரியை நாகலட்சுமி தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பரிமளா உட்பட பலர் ஒருங்கிணைத்தனர்.
