ADDED : ஏப் 08, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் பாமயனின் திணையியம் நுால் அறிமுக விழா நடந்தது. கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை அரசு கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ராஜமோகன் 'திணையே தமிழறம்' என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை தலைவர் அழகுச்செல்வம் 'திணை மரபுகளும், தமிழ்க் கலை மரபுகளும்' என்ற தலைப்பிலும், நுால் ஆசிரியர் பாமயன் 'தினையே வாழ்வு' என்ற தலைப்பிலும் பேசினர். பேராசிரியர் ஜோதி முருகன் நன்றி கூறினார். பேராசிரியை நாகலட்சுமி தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பரிமளா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
