தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தலைச்சுற்றலை கண்டறியும் வி.என்.ஜி., கருவி அறிமுகம்

தலைச்சுற்றலை கண்டறியும் வி.என்.ஜி., கருவி அறிமுகம்

தலைச்சுற்றலை கண்டறியும் வி.என்.ஜி., கருவி அறிமுகம்


ADDED : அக் 13, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 07:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : விழிகளின் அசைவில் தலைச்சுற்றலை கண்டறிந்து, வீடியோவில் வரைபடமாக தெரிவிக்கும் வி.என்.ஜி., - வீடியோ நிஸ்டாக்மோ கிராபி, கருவி மதுரை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது:

பொதுவாக காதின் உட்பகுதியில் உள்ள சமநிலை அமைப்பில் ஏற்படும் சிக்கலால் தலைச்சுற்றல் உண்டாகலாம். காதின் உட்பகுதி சமநிலை அமைப்பானது உடலின் சமநிலையையும் நிலையான தகவல்களையும் பராமரிக்க உதவுகிறது. வி.என்.ஜி., பரிசோதனை என்பது விழிகளின் இயல்பான அசைவுகளை பின்தொடரும் முறை.

வலது, இடது என எந்த பகுதியில் தலைச்சுற்றல் வருகிறதோ, கண்ணிலும் அதே பகுதியில் எதிரொலிக்கும். கண்ணாடி போன்ற கருவியை நோயாளி அணிந்து கொண்டால், அவரது தலைசாய்வு மாற்றங்களுக்கு ஏற்ப விழிகளின் அசைவும் மாற்றத்திற்குள்ளாகி வீடியோ முறையில் வரைபடமாக தெரியும்.

இதன் வாயிலாக சமநிலை அமைப்பின் சிக்கல்களை பரிசோதிக்க முடிவதால், முறையான சிகிச்சை அளிப்பதோடு மீண்டும் தலைச்சுற்றல் வராமல் குறைக்கவும் இக்கருவி உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us