ADDED : மார் 20, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 மாலை 5:30 முதல் மார்ச் 23 மதியம் 1:30 மணி வரை நடக்கும் ஐ.பி.எல்.,கிரிக்கெட் போட்டிகளை மெகா ஸ்கிரீனில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இலவசமாக பார்க்கலாம். டாடா ஐ.பி.எல்., பேன் பார்க் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
நேரடி டி.ஜே.இசை, பேஸ் பெயின்டிங், குழந்தைகளுக்கான பகுதி மற்றும் அதிர்ஷ்டசாலிகளுக்கு வீரர்களின் கையொப்பமிட்ட ஜெர்ஸி டி-ஷர்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.

