/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிலையூர் கால்வாயில் இரும்பு வலை அமைப்பு
/
நிலையூர் கால்வாயில் இரும்பு வலை அமைப்பு
ADDED : ஜன 21, 2026 06:28 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை தண்ணீர், மழைநீர் செல்லும் நிலையூர் கால்வாயில் இரும்பு வலைகள் அமைக்கும் பணி நடக்கிறது.
திருப்பரங்குன்றம் தாலுகா கண்மாய்கள், பெருங்குடி கண்மாய், கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்க்கு நிலையூர் கால்வாய் மூலம் வைகை அணை தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த கால்வாய்க்குள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விளாச்சேரியில் இருந்து சந்திரா பாளையம் வரை பிளாஸ்டிக் உள்பட அனைத்து கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்பின. நிலையூர் கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், விளாச்சேரி முதல் பெருங்குடி வரை வலுவிழந்த பகுதிகள் சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்கிறது. தற்போது கால்வாய் கரை பகுதியில் இரும்பு வலைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

