/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடா
/
நுாறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடா
ADDED : ஏப் 23, 2025 04:29 AM
பேரையூர் : பேரையூர் தாலுகா சேடபட்டி ஒன்றியம் சாப்டூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலை எதுவும் நடக்காமல், மரக்கன்றுகளை மட்டும் நட்டவர்கள், ரூ.26 லட்சம் மதிப்பில் வேலை நடந்ததாக போர்டு வைத்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நேற்று ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது: பள்ளி வளாகத்திற்குள் சில மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளனர். வேறு எந்த வேலையும் அங்கு நடக்கவில்லை. ஆனால் ரூ. 26 லட்சத்துக்கு வேலை நடந்ததாக போர்டு வைத்து உள்ளனர். இதேபோல் சின்னக் கோயில் ஓடை, ராஜா காட்டு ஓடை, கும்பேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடை ஆகியவற்றிலும் வேலையே செய்யாமல் ரூ. பல லட்சங்களுக்கு வேலை நடந்துள்ளதாக முறைகேடு செய்துள்ளனர். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என்றனர்.

