தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/பஸ்சு புதுசு என்றாலும் 'தள்ளு, தள்ளு' தானா

பஸ்சு புதுசு என்றாலும் 'தள்ளு, தள்ளு' தானா

பஸ்சு புதுசு என்றாலும் 'தள்ளு, தள்ளு' தானா


UPDATED : அக் 06, 2026 04:06 AM

ADDED : அக் 05, 2026 06:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 04:06 AM ADDED : அக் 05, 2026 06:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து புதுக்குளம் சென்ற அரசின் 'வெற்றிப் பயண' பஸ் நடுவழியில் நின்றதால் பயணிகள், போலீசார் உதவியுடன் பஸ்சை தள்ளிச் சென்றனர்.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் செக்கானுாரணி டெப்போவைச் சேர்ந்த '21 எப்' பஸ், நேற்று காலை மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து காளவாசல் வழியாக புதுக்குளம் சென்றது. திடீரென பி.பி. சாவடியில் பஸ் நின்றது. நடுவழியில் நின்றதால் காளவாசல் சிக்னலில் இருந்து தேனி ரோட்டில் ஒரு கி.மீ.,க்கு நெரிசல் ஏற்பட்டது.

பஸ் நகராததால் அப்பகுதியில் பணியில் இருந்த போலீசார், பயணிகள் சேர்ந்து பஸ்சை தள்ளி ரோட்டோரம் நிறுத்தினர். சமீபத்தில் அரசு வழங்கிய புதிய பஸ் பாதியிலேயே நின்றது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், புதிய பஸ்கள் அனைத்தும் கதவுகளை முழுமையாக மூடாவிட்டால் நகராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளது. சம்பந்தப்பட்ட பஸ்சின் கதவும் சரியாக மூடாததால் பாதியில் நின்றுள்ளது. டிரைவர் புதியவர் என்பதால் பஸ்நின்று விட்டது. இதுபோன்ற சம்பவம் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us