/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காவு வாங்க காத்திருக்கிறதா நடுரோட்டில் மின் கம்பம்
/
காவு வாங்க காத்திருக்கிறதா நடுரோட்டில் மின் கம்பம்
காவு வாங்க காத்திருக்கிறதா நடுரோட்டில் மின் கம்பம்
காவு வாங்க காத்திருக்கிறதா நடுரோட்டில் மின் கம்பம்
ADDED : ஜூலை 31, 2025 03:26 AM

மேலுார் :  மேலுார் நகராட்சி எட்டாவது வார்டில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளதால் வாகன போக்குவரத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.
இந்த  நகராட்சியில் 3, 4,8, 9 வார்டுகளுக்கு உட்பட்ட கஸ்துாரிபாய் நகர், ஸ்டார் நகர், நொண்டி கோவில் பட்டி, வெள்ளநாதன் பட்டி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மேலுார்- எட்டிமங்கலம் வரை இணைப்பு சாலையாக உள்ளதால் ரோட்டில் எந்நேரமும் மக்கள் போக்குவரத்து உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் ரோட்டில் நடுப்பகுதியில் மின்கம்பம் உள்ளது.
அப்பகுதி  சரவணன் கூறியதாவது:  எட்டிமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மேலுார் மார்க்கெட் வருவதற்கு இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். ரோட்டில் பயணிக்கும் மக்கள், பள்ளி வாகனங்கள், திருமண மண்டபத்திற்கு வரும் வாகனங்கள் நடுரோடு மின்கம்பத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடுகின்றன. விரைந்து வரும் வாகனங்களால் விபத்து அபாயமும் உள்ளது.
மின்கம்பத்தை அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரியிடம் தெரிவித்தும் பலனில்லை. விபரீதம் விளையும்முன் நகராட்சி, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

