/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முடக்கப்படுகிறதா பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை குழு; மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் கொதிப்பு
/
முடக்கப்படுகிறதா பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை குழு; மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் கொதிப்பு
முடக்கப்படுகிறதா பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை குழு; மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் கொதிப்பு
முடக்கப்படுகிறதா பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணை குழு; மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்கள் கொதிப்பு
ADDED : ஜன 06, 2025 07:44 AM

மதுரை; மதுரை காமராஜ் பல்கலையில் நடந்த பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேட்டை விசாரிக்கும் குழு நியமிக்கப்பட்டு பல நாட்களாகியும் விசாரணையை துவக்கவில்லை. அதேநேரம் குழுவில் இடம்பெற்ற 2 உறுப்பினர்கள் விலகிய நிலையில் விசாரணை குழு முடக்கப்படுகிறதா என பேராசிரியர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இப்பல்கலையில் பிஎச்.டி., படிப்புகளுக்கானநுழைத்தேர்வு எழுதிய மாணவர்களிடம் அப்பிரிவு அலுவலர்கள் சிலர் பணம் பெற்றதாக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆதாரங்களுடன் அரசு செயலாளர் ரீட்டா ஹரீஸ் தக்கருக்கு புகார் அனுப்பினர். இதுகுறித்து விசாரிக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இப்பல்கலை பயோடெக்னாலஜி புலத்தலைவர் கணேசன் தலைமையில் 5 பேர் குழுவை 2024 டிச.,27 ல் பல்கலை நியமித்தது. குழு அமைத்தும் பல நாட்களாக விசாரணை துவங்கவில்லை.
இதற்கிடையே குழுவில்இடம் பெற்ற உறுப்பினர்கள் பேராசிரியர் சிவக்குமார், உதவி பேராசிரியை வரலட்சுமி ஆகியோர் சில நாட்களுக்கு முன் விலகினர். அவர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்கள் நியமிக்காததால் விசாரணை குழுவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
பிஎச்.டி., நுழைவுத் தேர்வு முறைகேடு விசாரணையை முடக்கும் வகையில் வேண்டுமென்றே சிலர் விசாரணையை தாமதப்படுத்துதல், உறுப்பினர்களை மறைமுகமாக விலக வைப்பது போன்ற நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர் என மாணவர்கள், பேராசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
யார் அந்தமுன்னாள் பேராசிரியர்
அவர்கள் கூறியதாவது:
தற்போதுள்ள விசாரணை குழுவில் இப்பல்கலை பேராசிரியர்கள் எத்தனை பேரை உறுப்பினராக நியமித்தாலும், அவர்களையும் ராஜினாமா செய்ய வைத்து விசாரணைக் குழுவை முடக்க சிலர் மறைமுகமாக திட்டமிட்டுள்ளனர். ஆனால் கன்வீனர் குழு சேர்மன் சுந்தரவள்ளி சென்னையிலேயே முகாமிட்டு அவரது துறை பணிகளைக் கவனிப்பதால் பல்கலையில் இதுபோல் நடக்கும் நுட்பமான பின்னணி அவரது கவனத்துக்கு செல்வதில்லை. இதனால் விசாரணைக் குழுவின்அவசியமும் திசை மாறுகிறது.
எனவே வேறு பல்கலை பேராசிரியர்கள், சிண்டிகேட் உறுப்பினர்களை குழுவில் சேர்க்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வணிகவியல், மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் பிரிவு மாணவர்களிடம்தான் நுழைவுத் தேர்வில் அதிகம் பேரம் பேசப்பட்டுஉள்ளதாகவும், அவர்களை முன்னாள் பேராசிரியர் ஒருவர் ஒருங்கிணைத்தாகவும் மாணவர்கள், பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் இந்த முறைகேடையும் நீர்த்துப்போக வைக்க சிலர் திட்டமிட்டுள்ளனர் என்றனர்.

