/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தைகள் வார்டில் கொசு உற்பத்தி கூடமா
/
குழந்தைகள் வார்டில் கொசு உற்பத்தி கூடமா
ADDED : டிச 22, 2024 07:01 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை குழந்தை நல வார்டின் உட்பகுதியில் திறந்தவெளியில் பாதாள சாக்கடை குழாய் மற்றும் மழைநீர் வடிகால் குழாய் உள்ளது. இதனால் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
குழந்தைகள் நல பொது மருத்துவ பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் 200 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த வளாகம் முழுவதும் சுத்தமாக பராமரிக்கப்படும் நிலையில் உட்பகுதியில் உள்ள கழிப்பறை எதிரில் மழைநீர் வடிகால் பாதை மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. பெரிய பாதாள சாக்கடை குழாயும் மூடப்படாமல் உள்ளது.
இந்த இடத்தில் மேற்பகுதி கட்டடம் இல்லாததால் மழை பெய்யும் போது சுவர்களில் ஈரம் படிந்து பாசிபிடித்து காணப்படுகிறது. பி.வி.சி., குழாய்களில் இருந்து தண்ணீர் கசிவதால் சுவரில் பாசி படிந்துள்ளது. உள்ளடங்கி இருக்கும் இந்த கழிப்பறை பகுதியை சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் உறவினர்கள் மட்டுமே பயன்படுத்துவதால் நிர்வாகத்தின் கண்ணில் படவில்லை.
தேங்கி கிடக்கும் தண்ணீரில் டெங்கு வைரஸ் பரப்பும் கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகும். பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.
குழந்தைகள் நோய்க்கு எளிதில் ஆளாகும் நிலையில் உள்ளதால் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் நலன் கருதி வடிகால்களை மூடி தண்ணீர் வெளியேற முறையான வழி ஏற்படுத்த வேண்டும்.