/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
10 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்
/
10 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்
10 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்
10 போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்
ADDED : மார் 17, 2026 05:02 AM

மதுரை: மதுரையில் உள்ள பத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஐ.எஸ்.ஓ., மற்றும் குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா (கியூ.சி.ஐ.,) சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போலீஸ் ஸ்டேஷன்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஸ்டேஷன், சுற்றியுள்ள பகுதிகளை துாய்மையாக வைத்தல், வழக்கு கோப்பு, ஆவணங்களை எளிதாக கையாள வழிவகை செய்தல், புகார் அளிக்க வருவோர் விசாரணை முடிந்து மன அமைதியுடன் திரும்பி செல்லும் வகையில் பார்வையாளர் அறைகளை மாற்றி அமைத்தல்.
ஏற்கனவே பதிவு செய்த வழக்குகளை துரித விசாரணை செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தல், நீதிமன்ற விசாரணை மூலம் எதிரிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருதல், அவசர அழைப்புகளுக்கு உடனடி தீர்வு காணுதல் போன்றவை சான்றிதழ் பெற அடிப்படை தகுதிகள்.
இதன் அடிப்படையில் நகரில் உள்ள 27 போலீஸ் ஸ்டேஷன்களில் விளக்குத்துாண், கீரைத்துறை, தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம், சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி, கூடல் புதுார், கோ.புதுார், அண்ணாநகர் உட்பட 10 ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

