ADDED : செப் 05, 2026 04:25 AM

மதுரை: மதுரையில் 2 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் இரவில் குறைந்துள்ளது.
மதுரையில் கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் செப்டம்பரிலும் நீடிக்கிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் உடல், மனப்புழுக்கத்தில் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் மாலை வேளையில் மழை பொழிந்தது. மதுரை நகர தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடியது.
நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ.,) : மதுரை வடக்கு 17.6, தல்லாகுளம் 12.8, சிட்டம்பட்டி 5.4, கள்ளந்திரி 2.2, இடையபட்டி 1, தனியாமங்கலம் 16, மேலுார் 8, விமான நிலையம் 0.3.
நீர்மட்டம்: பெரியாறு அணையில் 121.95 அடி (மொத்த உயரம் 152). அணையில் 3 ஆயிரத்து 14 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 239 கனஅடி வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 38.54 அடி (71 அடி). அணையில் 836 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 235 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.
