தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம்; லட்சுமி பள்ளி விழாவில் பேச்சு

 மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம்; லட்சுமி பள்ளி விழாவில் பேச்சு

 மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம்; லட்சுமி பள்ளி விழாவில் பேச்சு


ADDED : ஜன 27, 2026 09:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 27, 2026 09:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: ''இன்றைய மாணவர்கள் அறிவைவிட திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியம்'' என மதுரை வீரபாஞ்சான் லட்சுமி பள்ளி வெள்ளி விழாவில் குமரகுரு கல்விக் குழுமத் தலைவர் சங்கர் வானவராயர் பேசினார்.

விழாவிற்கு லட்சுமி வித்யா சங்கத் தலைவர் ஷோபனா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இயக்குநர் ஸ்ரீனிவாசன் வரவேற்றார். பள்ளி முதல்வர் சுபாஷினி பள்ளியின் சாதனைகள், தொலைநோக்கு பார்வையை விளக்கினார்.

இதில் சங்கர் வானவராயர் பேசியதாவது: இருபது ஆண்டுகளில் கல்வித்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் இப்பள்ளியில் கல்வி, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை கொண்டுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளால் காக்கப்பட வேண்டும்.

மாணவர் பருவத்தில் அறிவை விட திறமையையும், அணுகுமுறையையும் வளர்த்துக் கொள்வது அவசியம். கடின உழைப்பால் வெற்றி சாத்தியம். தொலைநோக்கு பார்வை, மதிப்பு கல்வியால் தான் தனித்துவம் பெற முடியும். சுதந்திரம் அடைந்த முதல் 25 ஆண்டுகள் இந்தியாவாக உருவாக முயற்சித்தோம். அடுத்த 25 ஆண்டுகள் ஒரு தேசத்தை கட்டியெழுப்பினோம்.

அடுத்த 25 ஆண்டுகள் ஒரு வளரும் நாடாக அழைத்து வந்தோம். வரும் 25 ஆண்டுகள் தான் இந்தியாவின் கடைசி மைல் பயணம். இந்த தலைமுறையினர் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.

முன்னாள் மாணவர் இந்திரஜித் உருவாக்கிய பள்ளியின் வெள்ளிவிழா நினைவு கட்டடத்தை சங்கர் வானவராயர் திறந்து வைத்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

சங்கச் செயலாளர் வெங்கட் நாராயணன், பள்ளித் தாளாளர் நடராஜன், மூத்த முதல்வர் சாந்தி, முன்னாள் மாணவர்கள் லலிதா பிரியதர்ஷினி, மணிமேகலை உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us