ADDED : மார் 01, 2024 06:35 AM
அ நிறம் | அளவு
மேலுார் : கச்சிராயன்பட்டியில் மறைந்த முதல்வர் ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார்.
பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பேசுகையில், ''ஜெ., கொண்டு வந்த மடிக்கணினி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களை தி.மு.க., நிறுத்தி விட்டது. மதுரையில் கட்டப்பட்ட நுாலகம் மற்றும் அலங்காநல்லுார் ஏறுதழுவுதல் அரங்கம் காட்சிப் பொருளாக உள்ளது. தி.மு.க., நிர்வாகி போதைப் பொருட்களைக் கடத்தி விற்கிறார். இதனால் தமிழகம் இன்று போதைப் பொருளின் கூடாராமாக மாறி விட்டது. விவசாயிகளின் போராட்டத்திற்கு எம்.பி., வெங்கடேசன் குரல் கெடுக்கவில்லை'' என்றார்.
