ADDED : டிச 14, 2025 06:44 AM

மதுரை: முதல்வரின் தேர்தல் வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்யராஜ், தமிழ் தலைமை வகித்தனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் மாநில ஆசிரியர்களுக்கும் கிடைக்க வேண்டும். 2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். 23.08.2010க்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களை 'டெட்' தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
உயர்மட்டக்குழு உறுப்பினர் செந்தாமரைக்கண்ணன்,வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் கோபி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கமாநிலப் பொருளாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
