/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

ADDED : ஜன 13, 2024 03:56 AM
பாலமேடு : ஜன.16, 17ல் நடக்க உள்ள பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது:
அரசு சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
அவனியாபுரத்தில் கலெக்டர் தலைமையிலும், பாலமேடு, அலங்காநல்லுாரில் விழா கமிட்டி சார்பிலும் ஏற்பாடுகள் 75 சதவீதம் முடிந்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தனி அரங்கம் அமைத்து விழா நடத்த இருக்கிறோம். பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு போட்டியும், பரிசுகளும் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். அமைச்சர் உதயநிதி அலங்காநல்லுார்போட்டியைக் காண வருவதாக கூறியுள்ளார்.
கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதல்வர் திறந்து வைக்கும்நாளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பர், என்றார்.
முன்னதாக ஏறு தழுவுதல் அரங்க பணிகளை ஆய்வுசெய்தார். கலெக்டர்சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஒன்றிய தி.மு.க., செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவிகள் ரேணுகா ஈஸ்வரி, சுமதி பாண்டியராஜன், செயல் அலுவலர்கள் ஜூலான் பானு, தேவி பங்கேற்றனர்.