/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு ஏற்பாடு: எஸ்.பி., ஆய்வு
/
ஜல்லிக்கட்டு ஏற்பாடு: எஸ்.பி., ஆய்வு
ADDED : டிச 28, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு:   பாலமேட்டில் ஜன.15, அலங்காநல்லுாரில் 16ல் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளை எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார்.
தை 1 பொங்கலன்று அவனியாபுரத்தை தொடர்ந்து தை 2ல் பாலமேடு மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல், தை 3 அலங்காநல்லுார் வாடிவாசலில் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக காளைகள் பரிசோதனை செய்யும் பகுதிகள், வாகனங்கள் செல்லும் ரோடு, காளைகள் வாடிவாசலுக்கு வரும் வழிகள், காளைகளை சேகரிக்கும் பகுதிகளை எஸ்.பி., ஆய்வு செய்தார். சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ.க்கள் அண்ணாதுரை, உத்திரராஜ், போலீசார் உடனிருந்தனர்.

