/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு விழா குழுவினர் 'மல்லுக்கட்டு'
/
ஜல்லிக்கட்டு விழா குழுவினர் 'மல்லுக்கட்டு'
ADDED : டிச 31, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலூர்: பொங்கலை முன்னிட்டு அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அரசு நடத்துவது வழக்கம்.
இவ் விழாவிற்கு ஒத்துழைப்பு தரக்கோரி மேலூர் ஆர்.டி.ஓ., சங்கீதா விழா குழு உறுப்பினர்கள் 10 பேரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நேற்று வெள்ளரிப்பட்டி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்த போது கூடுதலாக ஆட்கள் வரவே அனைவரையும் அலுவலகத்தை விட்டு வெளியேற்றினார்.
வெளியே வந்தவர்களுக்குள் பேச்சுவார்த்தை முற்றவே தகராறு ஏற்பட்டது.
அதனால் விழா குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, முத்துமாரி இருவரும் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

