/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு நடத்தியது அரசா, தி.மு.க.,வா
/
ஜல்லிக்கட்டு நடத்தியது அரசா, தி.மு.க.,வா
ADDED : ஜன 18, 2024 06:31 AM
திருப்பரங்குன்றம், : ''மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது தமிழக அரசா அல்லது தி.மு.க., வா'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெல்லும் வீரர்கள், காளைகளுக்கு பரிசு வழங்க பலர் தயாராக இருந்தனர்.
அதனை முறையாக வாங்காததால், 2, 3 ம் இடம் பிடித்த காளைகள், வீரர்களுக்கு பரிசுகள் வழங்க இயலாமல் போய்விட்டது. பார்வையாளர்களுக்கு இடம் ஒதுக்காததால் ஜல்லிக்கட்டை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை ஏற்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து நடத்தியது. அங்கு நடந்ததை பார்த்தபோது போட்டியை நடத்தியது தமிழக அரசா அல்லது தி.மு.க.,வா என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்தாண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பெறும் வீரர், காளைக்கு பரிசளிக்க தவறினால், அ.தி.மு.க., சார்பில் பரிசளிப்போம்.
2026ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வரானவுடன் எய்ம்ஸ் திறப்பு விழா நடைபெறும்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு வழங்க வேண்டிய இடத்தில் நீர்ப்பிடிப்பு பகுதி இருப்பதால் நீதிமன்ற ஆணை பெற்றோ, அல்லது மாற்று ஏற்பாடுகளையோ தமிழக அரசு செய்ய வேண்டும் என்றார்.