ADDED : ஜன 11, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ. 12 ஆயிரத்திற்கு விலை போன மல்லிகை நேற்று கிலோ ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது.
பனிப்பொழிவால் விளைச்சல் குறைந்ததால் மல்லிகை பூக்களின் விலை கடந்த ஆண்டை விட கூடுதலாக விற்பனையாகிறது. கடந்த ஆண்டு கிலோ ரூ. 8 ஆயிரத்திற்கு விற்ற நிலையில் நேற்று முன்தினம் கிலோ ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது. நேற்று காலை யிலும் வரத்து குறைவால் கிலோ ரூ. 7 ஆயிரத்திற்கு விலை போனது.
முல்லை ரூ.1200, கனகாம்பரம், காக்கரட்டான் உள்ளிட்ட பூக்கள் ரூ. 1000, பிச்சி ரூ. 500, மரிக்கொழுந்து ரூ. 250, பட்டன் ரோஸ் ரூ. 200, அரளி ரூ. 150, சம்மங்கி, செவ்வந்தி, பன்னீர் ரோஸ் ரூ. 100 கோழிக் கொண்டை 60 ரூபாய்க்கும், துளசி 50 ரூபாய்க்கும் விற்பனை யானது.

