தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜவ்வா இழுக்குது அம்ருத்... காத்து கிடக்குது சோழவந்தான்...

 ஜவ்வா இழுக்குது அம்ருத்... காத்து கிடக்குது சோழவந்தான்...

 ஜவ்வா இழுக்குது அம்ருத்... காத்து கிடக்குது சோழவந்தான்...


ADDED : மார் 24, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தானில் ஜவ்வாக இழுக்கும் அம்ருத் 2.0 திட்டப் பணிகளால் மக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

இங்கு ஒன்றரை ஆண்டுகளாக ரூ.13 கோடி மதிப்பீட்டில் கிணறு, மேல்நிலைத் தொட்டி,வீடு தோறும் குழாய்கள் அமைத்து மீட்டர் பொருத்தும் பணி நடந்தது. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை விரைந்து சீரமைக்காததாலும், பணிகளை முடித்து குடிநீரை வழங்காததாலும் அப்பகுதியினர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

கார்த்திகேயன், திருக்குமார் கூறியதாவது: பல மாதங்களாக பல பகுதிகளில் தோண்டினர். அந்த பள்ளங்களை இடிபாடுகளைக் கொண்டு அரைகுறையாக மூடினர். நகர் முழுதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர், டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். வாகனங்கள் செல்லும்போது கிளம்பும் துாசியால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

முன்னர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பிப்.,ல் பணிகள் முடிந்து குடிநீர் வழங்கப்படும்' என்றனர். தற்போது கேட்டபோது 'ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பல ஊர்களில் வேலை செய்து வருகிறது. இதனால் ஆள் பற்றாக்குறையால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் முடிக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us