ADDED : டிச 26, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கே.புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் தங்கநகை தயாரிப்போர், வணிகம் செய்வோருக்கு கட்டணமில்லா மேலாண்மை மேம்பாட்டு பயிற்சி ஜன. 7 முதல் 11 வரை அளிக்கப்படுகிறது.
தங்க நகை தொழில், வணிகம் செய்யும் சிறு தொழிலுக்கான உத்யம் சான்றிதழ் பெற்றோர் பங்கேற்கலாம். முதலில் வரும்  25 பேருக்கு அனுமதி. தொழிலாளர், மூலப்பொருட்கள், நிதி மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.  போட்டோ,  ஆதார் அட்டை,  கல்விச் சான்றிதழ் நகல், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர்  ஜாதி சான்றிதழுடன் வரவேண்டும் என ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அலைபேசி:  86956 46417.

