ADDED : ஏப் 13, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே சுந்தரங்குண்டு ஊர்க்காவலன் கோயில் கும்பாபிஷேகத்தில் கூட்டத்தை பயன்படுத்தி பெருமாளக்காளின் 65, மூன்று பவுன் தங்க நகையை சிலர் பறித்தார். அவர் சத்தமிடவே கிராம மக்கள் தேடினர்.
மதுரையை சேர்ந்த வர்கீஸ் ராஜா 37, மனைவி சுகன்யா 28, பிரபாகரன் 38, மனைவி அருணா 28, ஆகியோர் அவசரமாக டூவீலரில் புறப்பட்டனர்.
அவர்களை பிடித்து கள்ளிக்குடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடக்கிறது.

