ADDED : மார் 18, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் காளியம்மன் கோவில் தெரு முருகன் மனைவி ராமலட்சுமி 65. நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது 2 பேர் டூவீலரில் வந்தனர். பின்னால் அமர்ந்திருந்தவர் மாஸ்க் அணிந்திருந்தார்.
ராமலட்சுமியிடம் ஒரு போட்டோவை காட்டி 'இவர் பைனான்ஸ் வாங்கியுள்ளார். வீடு எங்கு உள்ளது' என விசாரிப்பது போல் 2 பவுன் செயினை பறித்துவிட்டு தயாராக இருந்த டூவீலரில் ஏறி தப்பிச் சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.
