ADDED : அக் 18, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விப் பிரிவு (விவசாயஅறிவியல்) மாணவர்களுக்கான 10 நாட்கள் நேரடி அகப்பயிற்சி, பூஞ்சுத்திஅரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடந்தது.
கல்வித்துறை தொழிற்கல்வி இணை இயக்குநர் ஜெயக்குமார் களஆய்வு செய்து மாணவர்களிடம் உரையாடினார். மா, கொய்யா, நெல்லியில் ஒட்டு ரகங்கள் உருவாகும் விதத்தினையும், வீட்டு அலங்கார பூச்செடி வகைகள் உருவாக்குவது குறித்தும் கேட்டறிந்தார். தோட்டக்கலைப் பண்ணை அலுவலர் பவிதாரணி, தொழிற்கல்வி பயிற்றுநர் செல்வி, ஆசிரியர் சரவணன் பங்கேற்றனர்.