/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜூஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோலார் எனர்ஜி கட்டண பயிற்சி
/
ஜூஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோலார் எனர்ஜி கட்டண பயிற்சி
ஜூஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோலார் எனர்ஜி கட்டண பயிற்சி
ஜூஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோலார் எனர்ஜி கட்டண பயிற்சி
ADDED : பிப் 12, 2025 04:20 AM
மதுரை : மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் பழங்களில் குளிர்பானம் தயாரித்தல், ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோலார் எனர்ஜி குறித்த கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிப். 15, 16 ல் பழங்களில் இருந்து ஜூஸ், ஸ்குவாஸ், கிரஷ், மாம்பழ ஜூஸ், குளிர்பான வகைகள் தயாரித்தல் பற்றிய செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். இந்நாட்களில் டிஜிட்டல் மார்க்கெட், ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், இணையதளம் துவங்குவது, ஆன்லைன் விற்பனை உட்பட பல்வேறு தளங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
பிப். 22, 23 ல் சோலார் எனர்ஜிக்கான பயிற்சியில் சோலார் பி.வி. தெர்மல் சிஸ்டம் இன்ஸ்டலேஸன், ஆன் கிரிட், ஆப் கிரிட் சிஸ்டம், சோலார் இன்வெர்ட்டர்ஸ், பேட்டரி, டிசைன் மற்றும் வயரிங் டயகிராம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடனுதவி பெற வழிகாட்டப்படும். அலைபேசி: 86956 46417.

