ADDED : ஜன 02, 2025 05:15 AM
மதுரை: சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் போட்டி மதுரையில் நடக்கிறது. இதில் மதுரையில் இருந்து 6 அணிகள், திண்டுக்கல் 4, சிவகங்கையில் 4 அணிகள் நாக் அவுட் முறையில் போட்டியில் பங்கேற்றன. இதில் மதுரை கிரேஸ் மெட்ரிக் பள்ளி வெற்றி பெற்றது.
முதல் அரையிறுதி போட்டியில் பிரசித்தி வித்யோதயா பள்ளி, எஸ்.எம்.பி.எம். பள்ளிகள் மோதின. பிரசித்தி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் எடுத்தது. தஸ்வின் 58 (நாட்அவுட்), ஸ்ரீஹரி 50 ரன் எடுத்தனர். கன்வால் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய எஸ்.எம்.பி.எம்., அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 59 ரன் எடுத்தது. பிரசித்த அணி 115 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடுத்த அரையிறுதி போட்டியில் மதுரை கிரேஸ் மெட்ரிக் பள்ளி, சிவகங்கை செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளி மோதின. கிரேஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 100 ரன் எடுத்தது. ஞானவிஷால் 35, துரை பூதநாதன் 27 ரன் எடுத்தனர். கவுதம் பாலாஜி 3, கவியரசன் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய செல்லப்பன் அணி 15.5 ஓவர்களில் 62 ரன் எடுத்தது. ரித்திஷ் ராஜான் 16, சித்தார்த் 15 ரன் எடுத்தனர். அஸ்வத் மாரிமுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். கிரேஸ் அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டியில் கிரேஸ் பள்ளி, திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா அணிகள் மோதின. கிரேஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 122 ரன் எடுத்தது. துரை பூதநாதன் 68, ஞானவிஷால் 28 ரன் எடுத்தனர். ஸ்ரீ ஹரி 2, தஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய பிரசித்தி வித்யோதயா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 111 ரன் எடுத்தது. முகமது பஹீம் 23, தஸ்வின் 20 ரன் எடுத்தனர்.
பாண்டிமுருகன் 2, ஞானவிஷால் 1 விக்கெட் வீழ்த்தினர்.
கிரேஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது. கிரேஸ் பள்ளியின் துரை பூதநாதன் சிறந்த ஆட்டக்காரர் விருதையும் ஞானவிஷால் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

