தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன்போதுமே

ஒரு போன்போதுமே

ஒரு போன்போதுமே


ADDED : மார் 25, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலத்தை சரிசெய்க

மதுரை தெற்குவாசல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பள்ளங்கள் நிறைய உள்ளன. அதில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். பாலத்தின் கீழே சர்வீஸ் ரோடும் மோசமாக இருக்கிறது. மகாளிப்பட்டி செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். ரோட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- --சுந்தரமூர்த்தி, திருப்பதி நகர்.

குப்பையை எடுங்க

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை சர்வீஸ் ரோட்டில் உள்ளேயும், ரோட்டின் வெளிப்பகுதியிலும் ஒரு வாரமாக குப்பை அகற்றப்படவில்லை. கழிவுகள் காற்றில் பறந்து ஆங்காங்கே கிடக்கின்றன. அப்பகுதியில் வசிப்போருக்கும், வியாபாரம் செய்வோருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தினகரன், உசிலம்பட்டி

போக்குவரத்து நெரிசல்

வாடிப்பட்டி பஸ்ஸ்டாண்ட் பின்புறம் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வெள்ளை நிற கோடுகள் போடப்பட்டு ஆம்புலன்ஸ், உட்பட வாகனங்கள் சென்றன. தற்போது அக்கோடுகளை அழித்து விட்டதால் அதன்மீது அரசு பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் மருத்துவமனை செல்ல மீண்டும் இடையூறு, நெரிசல் ஏற்படுகிறது. மீண்டும் கோடு போட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

--- கவுரிநாதன், தென்கரை.

சுத்தமான நீர் கிடைக்குமா

மதுரை எச்.எம்.எஸ்., காலனி, ராமலிங்க நகர் மெயின் ரோடு பகுதிகளில் எட்டு மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -- நாகமணி, எச்.எம்.எஸ்., காலனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us