தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன்போதுமே

ஒரு போன்போதுமே

ஒரு போன்போதுமே


ADDED : மார் 13, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மோசமான ரோடு

மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகர், துரைசாமி நகர் மெயின் ரோடு மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். நடந்துகூட செல்ல முடியாத அளவிற்கு உள்ளது.

- ஹரிஷ் முத்து ராமசாமி, துரைசாமிநகர்.

பயனற்ற தபால் நிலையம்

மதுரை வாடிப்பட்டி மைய பகுதியில் செயல்பட்டு வந்த தபால் அலுவலகம் தற்போது 2 கி.மீ., தொலைவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இதனால் அதனை பயன்படுத்துவோர் மிகவும் அவதிப்படுகிறார்கள். துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கவுரிநாதன், தென்கரை.

ரோட்டில் சாக்கடை

மதுரை சிம்மக்கல் தென்னிந்திய நுகர்வோர், உரிமை பாதுகாப்பு அமைப்பின் அலுவலக வாசலில் சாக்கடை நீர் வெளியேறி ரோட்டில் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

- ராமநாதன், சிம்மக்கல்.

வீணாகும் குடிநீர்

மதுரை அரசரடி ஆரப்பாளையம் ரோடு ஞானஒளிவுபுரம் தனியார் மஹால் எதிரில் ரோட்டில் குடிநீர் பல நாட்களாக வீணாகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- லட்சுமண காந்தி, ஞானஒளிவுபுரம்.

மேடு பள்ளமான ரோடு

மதுரை மாநகராட்சி 30வது வார்டு மாவட்ட ஊராட்சி அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை எதிரில் ரோடு மேடு பள்ளமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுக்க வேண்டும்.

- ராகவன்,கோமதிபுரம்.

சீரான தளம் வேண்டும்

மதுரை ரேஸ்கோர்ஸ் முன்புறம் டூவீலர்கள் நிறுத்த தளம் இன்றி மேடு பள்ளமாக இருப்பதால் வாகனங்களை ஒழுங்கான முறையில் நிறுத்த முடியவில்லை. சரி செய்ய வேண்டும்.

- சஞ்சீவி,வள்ளுவர் காலனி.

பள்ளி முன்பு சாக்கடை

ஆண்டாள் கொட்டாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சாக்கடை நீர் வெளியேறி வாசலில் நிறைந்திருக்கிறது. குழந்தைகள் இந்த கழிவு நீரை மிதித்து தான் பள்ளி உள்ளே செல்ல வேண்டிய நிலை. தொற்றுநோய் பரவாமல் இருக்க அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

- இதயத்துல்லா, கல்மேடு.

ரோட்டில் சாக்கடை

மதுரை மாநகராட்சி 100வது வார்டு அவனியாபுரம் பிரசன்ன காலனி 5வது குறுக்கு தெருவில் சாக்கடை பெருகி ரோட்டில் ஓடுகிறது இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளது.

- ராஜேஸ்வரி, அவனியாபுரம்.

நடைபாதை ஆக்கிரமிப்பு

மதுரை சின்னக்கடைவீதியில் நடைபாதையில் பழக்கடை, செருப்பு கடை என ரோடு ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. நடந்து செல்ல இடையூறாக உள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--அசோக், தெற்கு வாசல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us