ADDED : ஜன 08, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தேசிய சணல் வாரியம் நிதியுதவியில் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் தையல் மூலம் சணல் சார்ந்த பொருட்கள் தயாரிப்புக்கான 35 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
சணல் பேக், லேப்டாப், லஞ்ச், ஸ்கூல் பேக், வாட்டர் கேன் பேக், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகை பைகள் தயாரிக்கும் பயிற்சி, தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். மத்திய அரசின் தொழில்முனைவோருக்கான உத்யம் சான்றிதழ், மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் குடிசைத்தொழில் சான்றிதழ் பெற்றுத்தரப்படும்.
ஆன்லைன் வியாபாரம், சந்தைப்படுத்துதல், வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும். முன் பதிவு: 90950 54177.

