ADDED : ஏப் 24, 2026 03:48 PM

மேலுார்: கச்சிராயன்பட்டியில் அதிக உப்பான ஆழ்குழாய் தண்ணீரை மக்கள் குடிநீராக பயன்படுத்துவதால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
இங்கு வசிக்கும் 1500க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே பால்குடி கிராமத்திலிருந்து ஆழ்குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவே கச்சிராயன்பட்டியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டது. தண்ணீர் அதிக உப்பாக இருந்ததால் ஓராண்டுக்கு முன் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இதன் அருகில் நீரேற்று நிலையம் மூலம் இத்தொட்டியில் காவிரி கூட்டு குடிநீர் ஏற்றி சப்ளை செய்வதாக கூறியதோடு சரி, பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
மக்கள் கூறுகையில், ''எங்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி கட்டி முடித்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தொட்டியை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்'' என்றனர்.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ஊராட்சி சார்பில் குழாய் பதிக்காததே தண்ணீர் விநியோகிக்க காலதாமதத்திற்கு காரணம். குழாய் பதிக்கும் வரை மக்களின் பயன்பாட்டிற்காக தொட்டியின் கீழ் பகுதியில் ஒரு குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்றனர்.
