தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கதம்பத்தேன்-வரலாறும் வாழ்வியலும்

 கதம்பத்தேன்-வரலாறும் வாழ்வியலும்

 கதம்பத்தேன்-வரலாறும் வாழ்வியலும்


ADDED : பிப் 12, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியர் : க.வளர்மதி

வெளியீடு : ராமநாதபுரம் தொல்லியல்

ஆய்வு நிறுவனம்

12/2750-12 மகாத்மா காந்தி நகர்

8வது தெரு,

பட்டணம் காத்தான் - 623 503

அலைபேசி : 99449 78282

பக்கம் : 154

விலை : 200

ஆ சிரியர் க.வளர்மதியின் முதல் நுாலாக 'கதம்பத்தேன் வரலாறும் வாழ்வியலும்' வெளிவந்துள்ளது. முதல் கட்டுரையில் நட்பின் இலக்கணத்தை திருக்குறளின் வழியில் எடுத்துச் சொல்லும் ஆசிரியர், அடுத்தடுத்த கட்டுரைகளில் ஆசிரியப்பணி அனுபவம், பெற்றோரை கொண்டாடுவதற்கான அவசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

'பள்ளிப்பருவ தீபாவளி நினைவலைகள்' என்னும் கட்டுரை, முதியோரையும் இளமை காலத்திற்கு அழைத்துச் செல்லும். வாசகர்கள் தங்கள் வாழ்க்கையை பல்வேறு நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்க்கும் வகையில் எளிமையான சொல் நடையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் கவிதைகளும் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பு. 25 இயல்களை கொண்டுள்ள இந்நுால் கதம்பத்தேனாகவே உள்ளது.

- அரும்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us