ADDED : அக் 17, 2026 06:15 PM
மதுரை: மதுரை செல்லுார் பாரதியார் மாநகராட்சி பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை ஆசிரியை கண்ணகி தலைமையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஸ்ரீபூ கலாசார மையம் செயலாளர் ராமகிருஷ்ணன், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு தலைவர் செந்தில்குமார், சேவலாயம் மாணவர்கள் இல்லம் காப்பாளர் கார்த்திகேசன் ஆகியோர் பரிசு வழங்கினர். ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார். மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் குருவம்மாள், முத்தையா, முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர். சமூக சேவகர் ரமேஷ்குமார், தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன், ஆசிரியர்கள், பிரசிடென்சி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
