/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கும் கள்ளழகர்கோயில் துாண்கள்
/
ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கும் கள்ளழகர்கோயில் துாண்கள்
ADDED : ஜன 08, 2024 05:09 AM

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர்கோயில் படியேற்றமண்டபம் முகப்பில் உள்ள துாண்கள் ஏழு ஸ்வரங்களின் சப்தத்தை ஒலித்து பக்தர்களின் காதுகளில் தேனிசை பாய்ச்சுகிறது.
கள்ளழகர்கோயில் தமிழக கலாசாரத்தின் ஒரு அங்கமாகவும், கட்டடம், சிற்பம், ஓவியம் என பல்வேறு பண்பாட்டு அடையாளங்களை சொல்வதாக உள்ளது. இக்கோயிலின் படியேற்ற மண்டபத்தின் வடபகுதி, தென்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துாண்கள் ஏழுஸ்வரங்களை ஒலிகின்றன.
இந்த துாண்கள், செதுக்கிய அக்கால சிற்பிகளின் திறமைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு துாணிலும் ஒரு ஓசை கேட்கும். முதல் துாணிலிருந்து ச, ரி, க, ம, ப, த, நி என வரிசையாக மாறிமாறி கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாறைகளில் இருவகையான பாறைகள் உள்ளன. இதில் இசை ஒலியைக் கொண்டுவரும் பாறைகளை கண்டறிந்து அதனை சிற்பங்களுக்கு நடுவில் துாணாக அமைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இன்று வரை கள்ளழகர் கோயிலுக்கு வரும் வெளிநாட்டவரும், ஆராய்ச்சி மாணவர்களும் இதனை கண்டு, கேட்டு வியந்து செல்கின்றனர்.